போலி ட்விட்டர் கணக்குகளிலிருந்து மதத் துவேஷ பதிவுகள்: யுஏஇ.க்குப் பிறகு கத்தார் இந்தியத் தூதரகமும் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டதையடுத்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகமும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுச் செய்தியைப் பரப்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

வளைகுடாநாடுகளிலிருக்கும் இந்தியர்கள் சிலர் சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் இந்தியாவில் கரோனாவைப் பரப்புகின்றனர் என்றும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.

யுஏஇயில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி பவன் கபூர் தன் ட்விட்டரில் ‘இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாகுபாடு கூடாது என்ற மதிப்பை பெரிதும் கடைப்பிடிக்கும் நாடுகளாகும். எனவே பாகுபாடு என்பது நம் அற ரீதியான கட்டமைப்புக்கு சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் இதை மதித்து நடந்தால் நல்லது’ என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் கத்தாரிலும் இரண்டு ட்விட்டர் கணக்குகளின் ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்ட இந்திய தூதரக அதிகாரி இரண்டு கணக்குகளும் ஒரே படத்தைக் காட்டுகின்றன, ஆனால் வேறு வேறு பெயர்களில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார், ஒன்றில் கல்ஃபில் இருப்பதாகவும் தெரிவித்த அவர் இரண்டுமே இஸ்லாமியத்துக்கு எதிரான துவேஷத்தைப் பரப்புவதாக உள்ளன என்றார்.

“போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி நம் சமூகத்தில் பிரிவினையைத் தூண்டி விடுகின்றனர். எதார்த்த நிலவரத்தைப் புரிந்து கொள்ளுங்கள், மோதலையும் வெறுப்பையும் விதைக்கும் தீங்கான நோக்கம் கொண்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். நம் கவனம் கோவிட்-19-ல் இருக்க வேண்டிய தேவையிருக்கிற்து” என்று ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கண்டிப்பான சட்டங்கள் உள்ளன. இணையதளத்தை எந்த ஒரு மதத்தையும் சமூகத்தையும் இழிவு படுத்த பயன்படுத்தினால் கடும் தண்டனை அங்கு உள்ளது, இப்படிப்பட்ட வெறுப்புப் பேச்சுக்காக கல்ஃப் நாடுகளில் இந்தியர்களை வேலையிலிருந்து அனுப்பப்பட்டு வருகின்றனர், ஆனால் இவர்களுக்கு ஆதரவாகவே ட்விட்டர்வாசிகளில் சிலர் இருந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பாக இந்தப் போக்குகளை கண்டிக்கும் விதமாகத்தான், ”கரோனா வைரஸ் நிறம், இனம், மதம், மொழி, சாதி என்று பார்க்காது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்