கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் வரை 5,000க்கும் அதிகமானவர்கள் பொது நிகழ்வுகளில், கூடுவதற்கு அயர்லாந்து அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இந்தக் காலகட்டத்தில் மக்கள் அதிக அளவில் கூடும் பெரிய நிகழ்வுகளுக்கு உரிமம் வழங்க வேண்டாம் என்று உள்ளூர் அதிகாரிகளிடம் அயர்லாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது” என்று செய்தி வெளியானது.
இந்த முடிவை அமைச்சர்கள் குழு எடுத்துள்ளது. இதன்படி 5,000க்கும் அதிகமான நபர்கள் செப்டம்பர் வரை பொது நிகழ்வுகளில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 5 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கைகள் தொடரும் என்றும், இருப்பினும் தளர்வு நடவடிக்கைகள் வைரஸ் பரவலைப் பொறுத்தே இருக்கும் என்றும் அயர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
அயர்லாந்தில் 16,040 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அயர்லாந்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.
25, 57,504 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,94,881 பேர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago