வன்முறைகளுக்குப் பெயர் பெற்ற மியான்மரில் கரோனா சோதனைக்கான சாம்பிள்களைக் கொண்டு சென்ற உலகச் சுகாதார அமைப்பின் வேன் மீது விஷமிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஓட்டுநர் மரணமடைந்தார்.
அரசு ஊழியர் ஒருவர் படு ஆபத்தான நிலையில் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா லாக் டவுன் உள்ளிடட் நடைமுறைகளினால் பல இடங்களில் வன்முறை கிளம்பியுள்ளது, மேலும் இதனால் கரோனா வாரியர்ஸ் என்று கருதப்படும் கரோனா நோயாளிகளுக்காகப் பாடுபடும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் நாளுக்கு நாள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
ஹூ வேன் ஓட்டுநர் பயே சோன் விங் மாங் காயத்தினால் செவ்வாயன்று மரணமடைந்தார் என்பதை ஹூ வருத்தமுடன் தெரிவித்துள்ளது.
ராக்கைன் மாகாணத்தில் உள்ள மின்பியா ஊரில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. ஒரு வாகனம் துப்பாக்கிச் சூட்டினால் சேதமடைந்தது.
ஐநா தலைமை செயலர் அந்தோனியோ கட்டெரஸ் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago