கவலைக்கிடம் உண்மையா? வடகொரியா அதிபர் கிம் விரைவில் நலமடைவார்: அதிபர் ட்ரம்ப் வாழ்த்து

By பிடிஐ

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இருப்பாதக செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவர் விரைவில் நலமடைய வாழ்த்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

உலக நாடுகள் கரோனாவின் பாதிப்பால் அச்சமடைந்து, அலறிக்கொண்டிருந்த வேளையில் மிகவும் கூலாக ஏவுகணைச் சோதனையை நடத்தியது. சீனாவில் கரோனா தாக்கம் அதிகரித்த போதிலும், கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவில் எந்த பாதிப்பும் இல்லை.

இதனால் சர்வதேச ஊடகங்களில் பல்வேறு விதமான ஊகக் கதைகள் வெளியாகின. அதிலும் சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் வடகொரியாவுக்கு எந்த விதமான கரோனா பாதிப்பும் இ்ல்லாமல் இருப்பதை நம்ப முடியவில்ைல எனத் அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், வட கொரியாவில் ஊடகங்கள் அரசின் வசம் உள்ளதால், அரசு தணிக்கைக்கு பின்புதான் அனைத்து செய்திகளும் வெளிஉலகிற்கு தெரியவரும்.

ஆனால் வடகொரியாவோ சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியபோதே, தனது எல்லைகளை மூடி, சீனா உடனான போக்குவரத்தை நிறுத்தியாக வடகொரியா விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், வட கொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்துள்ளா்.

சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ட்ரம்ப் பதில் அளிக்கையில் “ வடகொரிய அதிபர் உடல்நிலை குறித்து வரும் செய்திகளை நான் மறுக்கவில்லை அதேசமயம் அது உண்மை என்று சொல்லவில்லை. இதுபோன்ற அறிக்கைகள் வருகின்றன, ஆனால் உண்மை நிலவரம் தெரியாது

எனக்கும் வடகொரிய அதிபர் கிம்முக்கும் நல்ல நட்பு இருக்கிறது. நானும், கிம்மும் ஒருபோதும் போர் செய்ய வேண்டும் மனநிலையில் இல்லை. இதில் ஒருவர் அந்த மனநிலையில் இருந்திருந்தால்கூட அது நடந்திருக்கும். நாங்கள் பேச்சுவா்த்தை நடத்தியபின் நெருங்கிவிட்டோம்

கிம் உண்மையிலேயே ஆபத்தான நிலையில் இருந்தால் அவர் விரைவில் நலமடைய வாழ்த்துகிறேன். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவி்ப்பது உங்களுக்குத் தெரியும்தானே.

கிம் உடல்நலை குறித்து செய்திகளை இதுவரை யாரும் உறுதிப்படுத்த முடியவில்லை. சிஎன்என் மட்டுமே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், சிஎன்என் செய்தியில் எனக்கு அதிகமான நம்பிக்கை இல்லை” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்