அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திலும் எவ்வளவு கோவிட்-19 தொற்று இருக்கிறதை என்பதைக் காட்டும் வரைபடத்தை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
கார்னஜி மெல்லன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஃபேஸ்புக் எடுத்த கணக்கெடுப்பின் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கரோனா பிரச்சினை முடியும் வரை இதில் தகவல்கள் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற கரோனா அறிகுறி பற்றிய கணக்கெடுப்பை சர்வதேச அளவில் அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. அப்படியே, கரோனா அறிகுறி பற்றிய வரைபடமும் அந்தந்த நாடுகளுக்கு என தனியாகப் பதிவேற்றப்படும்.
இது போன்ற கணக்கெடுப்புகளை நடத்த ஃபேஸ்புக் தனித்துவமான, சரியான தளமாக இருக்கிறது என்றும், பில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்துவதால் இதில் கிடைக்கும் தரவுகள் துல்லியமாக இருக்கும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறியுள்ளார்.
» நியூயார்க்கில் மூன்று வாரங்களுக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை குறைந்தது
» ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நிறைவு: மீளமுடியாத நினைவுகளின் நிழல்
முன்னதாக, ஆப்பிள் மற்றும் கூகுள் என இரண்டு நிறுவனங்களுமே தங்களிடம் இருக்கும் மேப்ஸ் வசதியை வைத்து, எந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் கூடி அல்லது குறைந்துள்ளது என்ற தகவலைத் திரட்ட ஆரம்பித்து அதை தங்கள் தளங்களிலும் பதிவேற்றி வருகிறது. இன்ஸ்டாகிராமும் கோவிட்-19 தொற்று பரவல் பற்றி அறிவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago