அமெரிக்காவில் பிற மாகாணங்களைவிட நியூயார்க்கில் கரோனா தொற்று மிக அதிக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஒட்டுமொத்த மக்களையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சியில் நியூயார்க் மாகாண அரசு இறங்கியுள்ளது. நேற்று முதல் கரோனா பரிசோதனை முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33 கோடி. இதில் நியூயார்க்கில் மட்டும் 1.9 கோடி மக்கள் வசிக்கின்றனர். முதற்கட்டமாக நேற்று 3,000 பேரிடம் மாதிரிகள் பெற்று ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. நியூயார்க்கில் இதுவரை 2 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
13,869 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 7,99,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நிலையில், 42,897 பேர் இறந்துள்ளனர்.
‘தற்போது நியூயார்க்கில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு ஓரளவுக்கு குறையத் தொடங்கி இருந்தாலும், நோய் பரவல் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை என்று அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
» நியூயார்க்கில் மூன்று வாரங்களுக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை குறைந்தது
» ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நிறைவு: மீளமுடியாத நினைவுகளின் நிழல்
‘‘தற்போதைய நிலையில் அமெரிக்க அரசு, கரோனா பாதிப்புக்கு உள்ளான மாகணங்களுக்கு தேவையான அளவில் நிதி அளிக்க வேண்டும். தொழில் செயல்பாட்டை ஊக்கவிக்க மத்திய அரசால் நிதி வழங்க முடிகிறதென்றால், கரோனாவை எதிர்த்து களத்தில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான நிதி உதவி அளித்திட வேண்டும். இரவு பகல் பாராது உழைத்திடும் ஊழியர்களுக்கு அவர்களுக்கு கைமாறு செய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை’’ என்று நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரூ கியூமோ கூறியுள்ளார்.
கரோனா தொற்று தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிக அலட்சியமாக இருந்துவந்த நிலையில், நியூயார்க் கவர்னர் அண்ட்ரூ கியூம்மோ பொறுப்புடன் சூழலை கையாண்டு வருகிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago