வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இம்மாதத் தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கிம்மின் உடல் நிலை மோசமாகி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து வடகொரியாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தென்கொரியாவின் என்கே செய்தி நிறுவனம் தரப்பில், “ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வடகொரிய அதிபர் கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மவுண்ட் கும்காங் ரிசார்ட்டில் உள்ள ஒரு வில்லாவில் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ” செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கிம் ஜோங்கின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரசுத் தரப்பில் எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
» அமெரிக்காவில் கரோனா தொற்று 7,92,913 ஆக அதிகரிப்பு: விரைவில் 8 லட்சத்தைத் தாண்டும் அபாயம்
இந்த நிலையில் இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வடகொரிய அதிபர் கிம்மின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளிலும் கிம் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை தென்கொரியா மறுத்துள்ளதுடன் கிம்மின் உடல் நிலை மோசமான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம்மின் பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
கிம்மின் உடல் நிலை குறித்து இம்மாதிரியான செய்திகள் வெளியாவது இது முதல் முறை அல்ல.
2014 ஆம் ஆண்டு கிம் ஜோங்கின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்ததாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago