கரோனா பாதிப்பு இன்னும் தீவிரமாக நீடித்து வருகிற நிலையிலும், ஈரான் அதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கு கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது. இதனால் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கரோனாவால் கடும் பாதிக்குப்பு உள்ளான நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரானில் இதுவரை 83,505 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 5,209 பேர் உயிரிழந்துள்ளனர். 59,273 பேர் மீண்டுள்ளனர். இன்றைய தினத்தில் மட்டும் 91 பேர் இறந்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஈரான் அதன் ஊரடங்கு கட்டுப்பாட்டை பொருளாதார நோக்கில் தளர்த்தியுள்ளது. இன்று ஈரானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்தும் முடிவை ஈரான் அரசு எடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago