மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
அணு ஆயுதச் சோதனை காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று ஈரானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தங்கள் நாடு குறித்து தொடர்ந்து விமர்சிக்கும் அமெரிக்காவுக்கு ஈரான் பதிலளித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிப் கூறும்போது, ”ஈரான் இன்னும் சில மாதங்களில் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்யும். நீங்கள் செய்ய வேண்டியது மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துவது. குறிப்பாக எங்கள் நாட்டு விவகாரத்தில். நாங்கள் எந்த அமெரிக்க அரசியல்வாதியிடமும் ஆலோசனை பெற விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago