அடுத்த வாரத்தில் ஊரடங்கை தளர்த்தும் நியூசிலாந்து

By செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல் ஊரடங்கை கணிசமான அளவில் தளர்த்த இருப்பதாக அந்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறும்போது, ''நியூசிலாந்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில்
கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நியூசிலாந்தில் ஊரடங்கு கணிசமான அளவில் தளர்த்தப்பட
உள்ளது'' என்றார்.

மேலும், நியூசிலாந்தில் இனி சமூகத் தொற்று பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று அந்நாட்டு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் மார்ச் மாதம் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்பட்டன.

நியூசிலாந்தில் கரோனா தொற்றுக்கு 1,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். திங்கட்கிழமை அன்று நியூசிலாந்தில் 9 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்