நியூயார்க்கில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 507 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் நியூயார்க்கில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதுகுறித்து நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறும்போது, “கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று மட்டும் கரோனா தொற்றுக்கு 507 பேர் பலியாகியுள்ளனர்” என்றார்.
மேலும், சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றத் தொடங்கியதுதான் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கும் காரணமாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் இன்னும் முழுமையாக கரோனா தாக்குதலிலிருந்து வெளிவரவில்லை என்பதையும் ஆண்ட்ரூ கியூமோ கூறினார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸால் அமெரிக்காவில் 7,64,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,565 பேர் பலியாகியுள்ளனர்.
» கரோனா வைரஸ்: அமெரிக்காவில் அர்ப்பணிப்பு பணியில் உயிர்த்தியாகம் செய்த பல இந்திய மருத்துவர்கள்
நியூயார்க்கில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்புதான் நியூயார்க்கில், மக்கள் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதுவரை 24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago