ஈரானில் படிப்படியாக குறையும் பலி: தலைநகரில் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

By செய்திப்பிரிவு

ஈரானில் கரோனா வைரஸ் காரணமாக இறப்பு விகிதம் குறைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 74 பேர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. தலைநகர் தெஹ்ரானில் தொழில் நிறுவனங்கள் சனிக்கிழமை முதல் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது.

ஈரானில் கரோனா வைரஸுக்கு 80,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கரோனா தொற்று பாதிப்பு குறித்து அந்நாட்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், அரசு வெளியிட்ட எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை 8% முதல் 10% அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இதனிடையே, அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார். இந்நிலையில் ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

42 mins ago

உலகம்

14 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

மேலும்