கரோனாவுக்கு நீங்கள்தான் காரணமாக இருந்தால் கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள்; சீனாவுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை: உயிரிழப்பி்ல் சந்தேகம்

By பிடிஐ

கரோனா வைரை சீனாதான் தெரிந்தே பரப்பியதற்குக் காரணமாக இருந்தது கண்டுபடிக்கப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் எச்சரிக்கை விடுத்தார்

அதுமட்டுமல்லாமல் கரோன வைரஸால் சீனாவில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் எனக்கு பலவேறு சந்தேகங்கள் இருக்கின்றன என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை அங்கு 39 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தி வெளியானதிலிருந்து அதிபர் ட்ரம்ப் அதிருப்தியான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸை சீனா கையாண்ட விதம் எங்களுக்கு மிகுந்த அதிருப்தி அளிக்கிறது. எந்த விதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை, அமெரிக்கா சார்பில் எந்தவிதமான தகவல் கேட்டாலும் வழங்கவில்லை.

கரோனா வைரஸ் பரப்பியதற்கு சீனாதான் தெரிந்தே காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் விளைவுகளை்சந்திக்க நேரிடும். கடந்த 1917-ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்காவில் இதுபோல் யாரும் உயிரிழப்பைச் சந்தித்தது இல்லை.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு நல்லவிதமாகத்தான் இப்போதுவரை இருக்கிறது. ஆனால் இதுபோன்ற விஷயங்களைக் கேட்டபின் திடீரென மிகப்பெரிய மாற்றம் இருக்கிறது. சீனா மீது கோபமாக இருக்கிறீர்களா எனக் கேட்கிறீர்கள். என்னுடைய பதில் ஆம்,

ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கும், நம்மை மீறி நடப்பதற்கும், வேண்டுமென்றே ஒரு தவறைச் செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது உங்களுக்குத் தெரியும்.

சீனாவுக்கும், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. ஒருவேளை அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், அமெரிக்காவை சீனா சொந்தமாக்கிவிடும். இப்போதுவரை உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் பக்கத்தில் கூட சீனா வர முடியாது.

அதேபோல கரோனா வைரஸ் உயிரிழப்பில் அமெரிக்காதான் முதலிடத்தி்ல் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால்,நிச்சயம் நாங்கள் முதலிடத்தில் இருக்க முடியாது. சீனாதான் முதலிடத்தில் இருக்கும். வூஹானில் கரோனா உயிரிழப்புகளை சீனா திருத்தி வெளியிடுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது உண்ைமயான உயிரிழப்பு அதிகமாக இருக்கும். ஆனால், சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை அதை மறைக்கிறது

இவ்வாறு அதிபர் ட்ரம்ப்தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்