பாகிஸ்தானுக்கு கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட 84 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
பாகிஸ்தானிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு அமல்படுத்தியுள்ளார் பிரதமர் இம்ரான் கான்.
ஏற்றுமதித் துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், மென்பொருள் மேம்பாடு மற்றும் காகிதம், சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் உர ஆலைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட 84 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பால் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘பாகிஸ்தானில் பெருமளவு கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்களை காக்க நிதி அவசியம். அமெரிக்க அறிவித்துள்ள இந்த நிதியுதவி அந்த நாட்டிற்கு பெருமளவு உதவியாக அமையும்.’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago