ஈரானைச் சேர்ந்த இளம்பெண் சாஹர் தாபர். இவர் ஏஞ்சலினா ஜோலியைப் போன்றே முகத் தோற்றத்தைப் பெற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாஹர் தாபருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானைச் சேர்ந்தவரான சாஹர் தாபர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகர். இவர் ஏஞ்சலினாவைப் போன்றே முகத் தோற்றம் பெற விரும்பினார். இதனைத் தொடர்ந்து ஏஞ்சலினாவைப் போல தாடை எலும்புகள், நெற்றி, உதடுகள் பெற அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் இவர் ஒப்பனை மூலம் இவ்வாறு தோற்றமளிக்கிறார் என்றும் கூறுகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கிடையேதான் சாஹர் தாபர் ஈரானில் பிரபலமானார்.
இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வன்முறையைப் பரப்பும் விதமாகச் செயல்பட்டதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் சாஹர் தாபருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜாமீன் வேண்டி சாஹர், ஈரான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது அவருடைய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராம் மட்டும் பயன்பாட்டில் உள்ளது.
» தோனி குறித்து எப்படி தீர்மானம் செய்வீர்கள்? : ஹர்பஜன் சிங் கேள்வி
» கரோனா பீதி; அடைக்கலம் தேடி வந்த 200 ரோஹிங்யா முஸ்லிம்கள்: திருப்பியனுப்பிய மலேசிய அரசு
ஈரானில் கரோனா வைரஸுக்கு 77,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago