பிரான்சில் கரோனா பலி எண்ணிக்கை 18,000-த்தை எட்டியது. ஆனாலும் சில நல்ல அறிகுறிகள்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றுக்கு பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 18,000 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 1 மாத கால லாக்-டவுன் நடவடிக்கைகளினால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் பொதுச் சுகாதாரத் தலைவர் ஜெரோம் சாலமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2ம் நாளாக குறைந்துள்ளது என்றார். அதே போல் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை 8-வது நாளாக தொடர்ந்து குறைந்துள்ளது என்று அவர் கரோனா கட்டுப்பாட்டில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ஆனாலும் பிரான்ஸ் சுகாதாரம் முழுதுமே பெரிய அளவில் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. பிரான்ஸ் குடிமக்கள் லாக்-டவுன் விதிமுறைகளை கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

பிரான்ஸில் மே 17ம் தேதி வரை லாக்-டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

“ஐசியு-வில் நோயாளிகள் குறைவு உறுதியாகி வந்தாலும் ஐசியுவில் 6,248 நோயாளிகள் என்பது இன்னமும் கூட அதிகமானதே. ஆனால் ஏப்ரல் 8ம் தேதி உச்சத்தில் 7,148 பேர் ஐசியுவில் இருந்ததைவிட தற்போது குறைந்துள்ளது” என்றார் ஜெரோம் சாலமன்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்த இடத்தில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரான்ஸ் உள்ளது. உலகில் கரோனா மரணங்களில் மூன்றில் 2 பங்கு மரணங்க்ள் இந்த நாடுகளில் நிகழ்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை 108,847 ஆக உள்ளது. நர்சிங் ஹோம்களில் கரோனா சந்தேக எண்ணிக்கை 37, 213 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,46,206 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE