பாகிஸ்தானில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6297 ஆக அதிகரித்துள்ளது. 117 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் நாளும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ளன.
பாகிஸ்தானில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,493 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 96 பேராகவும் இருந்தது.
இந்தநிலையில் அங்கு தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6297 ஆக அதிகரித்துள்ளது. 117 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று இம்ரான் கானிடம் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
பாகிஸ்தானில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு இம்ரான் அமல்படுத்தியுள்ளார் கான். எனினும் ஏற்றுமதித் துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், மென்பொருள் மேம்பாடு மற்றும் காகிதம், சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் உர ஆலைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago