சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது.
சீனாவில் இன்று மட்டும் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கரோனோ பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருகிற நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன – ரஷ்ய எல்லையில் அமைந்திருக்கும் சூஃபென்ஹேயில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில் மற்றொரு வூஹானாக மாறி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
கரோனா வைரஸ் முதல் முறையாக கடந்த நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது சீனா கரோனா தாக்குதலில் இருந்து மீண்டுவிட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சீனர்களிடம் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மிகக் குறிப்பாக சீன- ரஷ்ய எல்லைப் பகுதிகளில் கரோனோ தொற்று ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இன்று மட்டும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 10 பேரைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய சீனர்கள் என்றும் சீனாவின் தேசிய சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.
இதுதவிர, கரோனா அறிகுறி வெளிப்படாத ஆனால் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிற 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கை 1,023 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையில் சீனாவில் மொத்தமாக 82,295 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. அதில் 3,342 பேர் பலியாகியுள்ளனர். 77,816 பேர் குணமாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
2 days ago