கரோனா வைரஸ் தொடர்பாக சரியான தகவல் தருவதில்லை: ஊடகங்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாய்ச்சல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களைத் தருவதில் அமெரிக்க ஊடகங்கள் சரியாக செயல்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.

சீனாவின் வூஹான் நகரை பிறப்பிடமாகக் கொண்ட கரோனாவைரஸ் உலகம் முழுவதும் பரவியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வாஷிங்டனில் உள்ளவெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் பேசியதாவது:

கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அமெரிக்க ஊடகங்கள் அது தொடர்பான சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவதில்லை. நியாயமில்லாத காட்சிகளை ஒளிபரப்பி என் மீது அவப்பெயரை ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ளன.

இந்தப் பிரச்சினையை சமாளிக்க இதுவரை சரியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அதை ஊடகங்கள் சரியான முறையில் காட்டவில்லை என்பதே. பல பத்திரிகைகள், செய்தி தொலைக்காட்சிகள் இதை சரியாகச் செய்யவில்லை. நியாயமான செயல்களை அவை செய்யவில்லை என்பதே எனது ஆதங்கம். ஊடகங்கள் தங்களது தர்மத்தை உணர்ந்து செயல்படவில்லை. போலியான செய்திகள் தேவையில்லை.

ஊரடங்கு விஷயத்தில் நான் மெத்தனமாக நடந்துகொண்டதாக என் மீது ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. சில மாகாணங்களின் ஆளுநர்கள் ஊரடங்கு வேண்டாம் என்று விரும்பினர். தற்போது ஆயிரக்கணக்கானோரை நாம் இழந்துவிட்டோம். அதைச் சரி செய்யவேண்டிய நெருக்கடியில் நாம் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை சீன அரசு பல வாரங்களுக்கு மறைத்து வைத்திருந்தது. இதனால் சீனாவுக்கு -மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும்.என்ன மாதிரியான விளைவுகள் என்று நான் சொல்லப் போவதில்லை. சீனாவே அதைக் கண்டறியும். நான் ஏன் அதைச் சொல்லவேண்டும். நீங்களே (பத்திரிகையாளர்கள்) அதைக் கண்டறிவீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1.2 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் நேற்று வரை 1,21,042 பேர் உயிரிழந்துள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்திரேலியா

இதனிடையே கரோனா வைரஸ் பரவுவதை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளன. கடந்த 2 வாரங்களில் அங்கு புதிய கரோனா வைரஸ் நோயாளிகள் வெகுவாகக் குறைந்துவிட்டனர்.

இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடு விரைவில் தளர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2 நாட்களில் 63 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,366 ஆக உள்ளது.

நியூஸிலாந்தில் மொத்தம் 1,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் அங்கு புதிதாக 8 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

பிரான்ஸில் ஊரடங்கு நீட்டிப்பு

பிரான்ஸில் மே 11-ம் தேதி வரைஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தெரிவித்தார். ஸ்பெயினில் கரோனா வைரஸால் 18,056 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரான் நாட்டில் கரோனாவால் 4,683 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் இறந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்