கரோனா வைரஸால் உலகம் அவதிப்படும் நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை

By செய்திப்பிரிவு

கிழக்கு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா தரப்பில், ”வடகொரியாவின் கிழக்குப் பகுதி நகரமான மன்சோன்னில் உள்ள கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை காலை 7 மணியளவில் நடத்தியது. வடகொரியா ஏவிய ஏவுகணை 150 கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர் நீரில் விழுந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதுவரையில், வடகொரியால் கரோனா வைரஸ் பரவியதா? கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதா? பலி எண்ணிக்கை என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

வடகொரிய அரசும் இதுவரை கரோனா வைரஸ் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்காத நிலையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் அண்டை நாடான, தென் கொரியாவில் 10,564 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 222 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 21-ம் தேதி வடகொரியா கேஎன்-24 என்ற குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது.

தொடர்ந்து அத்துமீறி ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்