ஐரோப்பிய நாடுகள் ஒரு வைரஸுடன் போராடிக் கொண்டிருக்க ஈரான் இரு வைரஸுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது என்று அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் 70,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரஹ்வானி கூறும்போது, “ஐரோப்பிய நாடுகள் ஒரு வைரஸுடன் போராடிக் கொண்டிருக்க ஈரான் இரண்டு வைரஸ்களுடன் (கரோனா வைரஸ், பொருளாதாரத் தடை) போராடிக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் கரோனாவினால் ஏற்படும் இறப்பைக் கட்டுப்படுத்தியுள்ளது” என்றார்.
» கரோனாவால் இறந்தவர் எந்த மதத்தவராக இருந்தாலும் உடலை எரியூட்ட வேண்டும்: இலங்கை அரசு அறிவிப்பு
» பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு
இதனிடையே அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் எங்கள் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீப் வலியுறுத்தியுள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
2 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago