வரலாற்றில் இல்லாத அளவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு; ரஷ்யா-சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம்; மீண்டும் விலை உயரும்: ட்ரம்ப் பாராட்டு

By பிடிஐ

ரஷ்யா-சவுதி அரேபிய நாடுகள் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதால் சர்வதேச சந்தையில் விலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வரும் மே மாதத்தில் இருந்து இரு நாடுகளும் சேர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாள் ஒன்றுக்கு 97 லட்சம் பேரல்கள் உற்பத்தி செய்வதைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் பிரண்ட் கச்சா எண்ணெய் 7.7 சதவீதம் உயர்ந்து 24.52 டாலராகவும், ஆசியச் சந்தையில் பிரண்ட் எண்ணெய் 33.08 டாலராகவும் அதிகரித்தது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கச்சா எண்ணெய் நுகர்வின் முக்கிய நாடுகளில் நுகர்வு குறைந்ததால் விலையும் சரிந்தது வந்தது. ஆனாலும், சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான விலைப் போட்டியால் இரு நாடுகளும் உற்பத்தியை அதிகரித்து வந்ததால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நாளுக்கு விலை அடிமட்டத்துக்குச் சென்றது. இதனால் ஒரு பீப்பாய் விலை கச்சா எண்ணெய் விலை 22 டாலர் வரை குறைந்தது.

இதனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்கள் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் விலைப் போரில் ஈடுபட வேண்டாம். உற்பத்தியைக் குறையுங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தன.

இதையடுத்து, வியன்னாவில் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நாடுகள் என அழைக்கப்படும் ஒபேக் அமைப்பும், ரஷ்யாவின் சார்பில் அதிகாரிகளும் நேற்று காணொலி மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மே மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 97 லட்சம் கச்சா எண்ணெய் பேரல்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது என மெக்ஸிகோ நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் ரோசியா நாலே தெரிவித்தார்.

ஒபேக் நாடுகளின் பொதுச்செயலாளர் முகமது பர்கின்டோ இந்த ஒப்பந்தம் குறித்துக் கூறுகையில், “ரஷ்யா, சவுதி அரேபியா இடைய ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமி்க்கது. 2 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2022-ம் ஆண்டுஏப்ரல் மாதம் வரை இந்த உற்பத்திக் குறைப்பு இருக்கும். ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் பங்கேற்றுள்ளதால், மற்ற நாடுகளின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சவுதி அரேபியா சார்பில் அந்நாட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர் அப்துல்லாஜிஸ் பின் சல்மான் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறுகையில், “ ரஷ்யா, அல்ஜீரியாவுடன் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் கருத்தொற்றுமையின் அடிப்படையில் முடிந்தது” எனத் தெரிவித்தார்.

ரஷ்யா, சவுதி அரேபியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சியும், வரவேரற்பும் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், “மிகப்பெரிய ஒப்பந்தம் ரஷ்யா, சவுதி அரேபியா இடையே ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், சவுதி அரேபிய மன்னர் சல்மான் ஆகியோரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பு காப்பாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்