இந்தியப் பொருளாதாரத்தை கரோனா வைரஸ் மிக மோசமாக சீர்குலைக்கும், நாட்டில் முன்பு இருந்த பொருளாதார இடர்களை இன்னும் பெரிதாக்கிவிட்டுச் செல்லும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகிறது. இதுவரை 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இன்றுடன் 19-வது நாளை எட்டியுள்ளது.
இந்த 19 நாட்களாக வர்த்தகம், தொழில், சிறு, குறுந்தொழில்கள், போக்குவரத்து, சிறு, பெருநிறுவன செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி, பொருளாதார சுழற்ச்சி தடை பட்டுள்ளது.
இது குறித்து தெற்காசிய பொருளாதார பாதிப்பு எனும் தலைப்பில் உலக வங்கியின் தெற்காசியாவுக்கான பொருளாதார வல்லுநர் ஹன்ஸ் டிம்பர் நிருபர்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்து, அறிக்கையும் வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
» லாக்டவுனுக்கிடையே மீண்டும் தொடங்கியது தேயிலைப் பறிப்பு: திரிபுராவில் 2வது நபருக்கு வைரஸ் தொற்று
இந்தியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் 5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் 2021 ம் நிதியாண்டில் அது 2.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும். இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே குறைந்திருந்த நிலையில் இந்த கரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள லாக்டவுன் கட்டுப்பாட்டால், பொருட்கள், மக்கள் செல்வதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டில் பொருட்களின் சப்ளை, தேவையில் பெரும் இடைவெளி ஏற்படக்கூடும்.
இதன் காரணமாக 2021-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையலாம். எங்களின் முதல்கட்ட கணிப்பில் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக சரியக்கூடும்.
பல்ேவறு இடர்களைத் தவிர்க்கும் பொருட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டளவில் முதலீடுகளை செய்வதைத் தாமதப்படுத்தலாம், இதனால் நிதித்துறையில் மீண்டும் எழுச்சிபெறுவது கடினமாக இருக்கும்.
ஆனால், மத்தியஅரசின் பொருளாதார கொள்கை, நிதிக்கொள்கை ஆதரவு ஆகியவற்றால் 2022-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வளர்ச்சி பெறக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பொருளாதார வல்லுநர் ஹன்ஸ் டிம்பர் நிருபர்களுக்கு காணொலி மூலம் பேட்டியில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நடப்பு ஆண்டு சிறப்பாக இருக்காது. இந்தியாவில் தொடர்ந்து லாக்டவுன் நீடித்தால் இப்போது கணித்துள்ள 2.8 சதவீதத்தைக் காட்டிலும் மோசமாக வீழ்ச்சி அடையும். இந்த பொருளாதார சரிவிலிருந்து மீள்வதற்கு இந்திய அரசு நடவடிக்ைககளை எடுக்க வேண்டும்
முதலாவதாக கரோனா வைரஸ் பரவும் வேகத்தை மட்டுப்படுத்தி, அனைவருக்கும் உணவு கிைடப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக தற்காலிகமாக அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், குறிப்பாக உள்ளூர் மட்டத்தில் வேலையை உருவாக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும். குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள் திவாலாகாமல் பார்த்து, அவற்றுக்கு கைகொடுக்க வேண்டும்.
நீண்டகாலத்தில்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நிலையான பாைதக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது, ஆனால் நிதிஅம்சங்களில் அல்லாமல் சமூகரீதியாக முடியும்.
இந்திய அரசுடன் இணைந்து கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக வங்கியும் செயலாற்றி வருகிறது. இதற்காக 100 கோடி டாலர்களை வழங்கியுள்ளோம். மேலும், வேலைவாய்ப்பு, வங்கி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மீட்கவும் நாங்கள் உதவி வருகிறோம்.
அதேசமயம் ஏற்கெனவே இந்தியாவில் இருந்த பொருளாதார இடர்களை கரோனா வைரஸ் பெரிதாக்கிவிட்டுச்செல்லும். குறிப்பாக வேலையிழப்பு, தொழில்கள்முடக்கம், ஆட்குறைப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் மேலும் சிக்கல் வரலாம்” எனத் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago