கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 கொள்ளை நோய் காலக்கட்டத்தில் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துக் கொள்ளாத அல்லது அழைத்துக் கொள்ள மறுக்கும் அல்லது போக்கு காட்டும் நாடுகள் மீதான விசாத்தடைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த புதிய விசா சட்டத்திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த புதிய சட்டத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் என்று அவர் மெமோராண்டம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழும் பிற நாட்டு மக்கள், குடியிருப்பு வாசிகள் ஆகியோரை திரும்ப அழைத்துக் கொள்ள மறுப்பது, காரண காரியமில்லாமல் திரும்ப அழைப்பதில் தாமதம் காட்டுவது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாதது, இதனால் அமெரிக்கர்களுக்கு பொதுச்சுகாதார இடர்பாடுகள் ஏற்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விதிமுறைகளை மீறும் பிற நாட்டு குடிமக்களை அமெரிக்கா திரும்பியும் அவர்கள் நாட்டுகே அனுப்புவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஹோம்லேண்ட் பாதுகாப்புச் செயலர் மற்றும் அமெரிக்க அமைச்சரிடம் ட்ரம்ப் பேசியுள்ளார்.
இது தொடர்பான நடைமுராஇஅக்லை ஹோம்லேண்ட் பாதுகாப்புச் செயலர் தொடங்டுவார், அவர் அமெரிக்காவின் இந்த கோரிக்கையை ஏற்காத நாடுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்வார் என்று ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
அடையாளம் கண்ட நாடுகளின் பட்டியலை ஹோம்லேண்ட் பாதுகாப்புச் செயலர் அமெரிக்க அரசுச் செயலரிடம் கையளிப்பார்.
இந்தப் பட்டியல் அவர் கைக்கு வந்து சேர்ந்த 7 நாட்களில் அந்த நாட்டின் மீது விசாக்கட்டுப்பாடுகளை அவர் விதிப்பார்.
அப்படி அந்த அறிவிக்கை அளிக்கப்பட்டு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் மீது உடனடியாக விசா தடைகள் அகற்றப்படும் என்று ட்ரம்ப் தீர்மானத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவில் கரோனா தொற்று எண்ணிக்கை 500,000 -த்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago