சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய உயர்மட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய உயர்மட்ட ஆணையம் வெள்ளிக்கிழமை கூறும்போது, “சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்தவர்கள். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரது உடல் நிலையும் சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 287 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிங்கப்பூரில் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
சிங்கப்பூரில் ஒருமாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் சில நாட்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
» ஈரானில் கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 4,232 ஆக அதிகரிப்பு
» ஆறுதல் செய்தி: நியூயார்க்கில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago