நியூயார்க்கில் மூன்றாவது நாளாக கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், கரோனா தொற்று பாதிப்பினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்றும் உயிரிழப்பு ஏறக்குறைய 2 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரேநாளில் 1,900 பேர் உயிரிழந்தனர்.
இதில் நியூயார்க்கில் மட்டும் ஏப்ரல் 8 ஆம் தேதி 799 பேரும், ஏப்ரல் 9 ஆம் தேதி 779 பேரும் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கில் இறப்பு எண்ணிக்கை அதிரித்து வந்தாலும் தொற்று குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் ஆள நர் ஆண்ட்ரூ குவாமோ கூறும்போது, “நாம் நிறைய உயிர்களை நேற்று இழந்துவிட்டோம். ஆனால், நமக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்றார்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 691 பேர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 26 ஆயிரம் பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago