பிலிப்பைன்ஸில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கரோனா வைரஸால் பலியான சோகம்

By செய்திப்பிரிவு

பிலிப்பைன்ஸில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை கரோனா வைரஸால் பலியான சம்பவம் நடந்துள்ளது.

பிலிப்பைன்ஸில் கரோனா வைரஸுக்கு 4,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 221 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானது பிலிப்பைன்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட முதல் இளம் மரணமாக இது பதிவாகியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்