கரோனா சிகிச்சை: பிரிட்டன் பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றம்

By செய்திப்பிரிவு

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் இரண்டாவது நாளாக முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, “போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது போரிஸ் ஜான்சன் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருப்பது சிறந்த செய்தி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யுகேவில் கரோனோ வைரஸுக்கு 65,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,978 பேர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்