மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ், உயிர்குடிக்கும் ஆசையை இன்னும் குறைக்கவில்லை. உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சென்டர் ஃபார் சிஸ்டம்ஸ் சயின்ஸ் அன்ட் எஞ்சினியரிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்து 16 லட்சத்து 3ஆயிரத்து 284 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை 95 ஆயிரத்து 693 பேராக அதிகரித்துள்ளது.
அதேசமயம் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.56 லட்சத்தை நெருங்குகிறது
அதில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான். குறிப்பாக அமெரிக்காவில் தொடர்ந்து 3-வது நாளாக உயிரிழப்புகள் ஏறக்குறைய நாள்தோறும் 2 ஆயிரம் பேர்வரை உயிரிழந்துள்ளர்கள்.
கரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 691பேராக அதிகரித்துள்ளது, ேநற்று ஒரே நாளில் மட்டும் 1,900 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 566 ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குைறய 26 ஆயிரம் பேர் கரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் ேநற்று ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஸ்ெபயினில் இதுவரை 15 ஆயிரத்து 447 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 52 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்
இத்தாலிதான் உலகிலேயே அதிகமான உயிரிழப்பை கரோனா வைரஸால் சந்தித்துள்ளது.இத்தாலியில் இதுவரை 18 ஆயிரத்து 279 பேர் உயிரிழந்துள்ளனர், நேற்றுகூட 61பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இத்தாலியில் ஒரு லட்சத்து 43ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக இருக்கிறது
பிரான்ஸ் நாட்டில் கரோனா வைரஸால் நேற்று 1,341 பேர் பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 749 ஆக இருக்கிறது.
பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸால் 881 பேர் உயிரிழந்தனர் , இதனால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி, 7,978 ஆக அதிகரித்தள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 235 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 607 ஆகவும் அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 258 பேர் பலியானார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
உலகம்
56 mins ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago