பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப் படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,322 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார மையம் தரப்பில், ”இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை பாகிஸ்தானில் 4,322 ஆக அதிகரித்துள்ளது. 63 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து உள்ளனர்.
33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் 2,171 பேரும், சிந்து மாகாணத்தில் 1,036 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலைமை இன்னும் மோசமடைய கூடும் என்றும் மருத்துவமனைகளில் சமாளிக்க முடியாமல் போகலாம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு ஸ்பெயினில் 14,555 பேரும், இத்தாலியில் 17,669 பேரும் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 14,965 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
3 days ago