கரோனாவால் வருமானத்தை இழந்த 3 இந்தியர்கள்: துபாயில் அடித்த அதிர்ஷ்டம் 

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக துபாயில் வருமானத்தை இழந்த இந்தியர்கள் மூவர், லாட்டரி டிக்கெட் பரிசுத் தொகை மூலம் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஜிஜேஷ், ஷாஜகான் மற்றும் ஷானோஜ் பாலகிருஷ்ணன். இவர்கள் மூவரும் துபாயில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகின்றனர். கடன் வாங்கி, துபாயில் சுற்றுலாப் பயணிகளுக்காக காரை ஓட்டி வந்த இவர்களின் வருமானம் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முற்றிலும் தடைபட்டது.

இந்த நிலையில் இவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட் மூலம் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதன் காரணமாக மகிழ்ச்சியின் எல்லைக்கு மூவரும் சென்றுள்ளனர். மேலும், பரிசுத் தொகையை மூவரும் பிரித்துக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நண்பர்கள் கூறும்போது, ''கிடைத்த பரிசுத் தொகை மூலம் எங்கள் கடனை அடைத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தில் 2,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஸ்பெயினில் 14,555 பேரும், இத்தாலியில் 17,669 பேரும் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 14,965 பேர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்