நியூயார்க்கில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 779 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6,268 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ கூறும்போது, “நியூயார்க்கில் கடந்த 24 மணிநேரத்தில் 779 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,268 ஆக அதிகரித்துள்ளது.
சமூக விலகல் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளில் நிலைமை சீராகும். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை நமது பணிகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த சூழலில் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் ட்ரம்ப் தடை விதித்திருந்தார். ஆனால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு ட்ரம்ப் தடை விதிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் நியூயார்க்கில் கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதாக அந்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு ஸ்பெயினில் 14,555 பேரும், இத்தாலியில் 17,669 பேரும் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.அமெரிக்காவில் 14,965 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 mins ago
உலகம்
45 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago