நியூயார்க்கில் முதல் கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பதற்கு பல வாரங்கள் முன்னதாகவே பிப்ரவரி மத்தியில் கரோனா வைரஸ் சுழற்சியில் இருந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானதுதானே தவிர ஆசியாவிலிருந்து அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள், மவுண்ட் சினாயில் உள்ள இகான் மருத்துவப் பள்ளி மரபணு ஸ்பெஷலிஸ்ட் ஹார்ம் வான் பேகெல் கூறுவது என்னவெனில், “பெரும்பாலான தொற்றுக்கள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானதே” என்றார்.
நியூயார்க் கரோனா நோயாளிகளின் மரபணு மார்ச் மாத இடைப்பகுதியில் எடுக்கப்பட்டன. அதாவது முன்னமேயே டெஸ்ட்களை துரிதப்படுத்தியிருந்தால் பிப்ரவரியில் மறைந்திருந்த கரோனா தொற்றுக்களைக் கண்டுபிடித்திருக்கலாம் என்கின்றனர் இந்தப் பள்ளியின் ஆய்வாளர்கள்.
சீனாவிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் ட்ரம்ப் தடை போட்டார், ஐரோப்பியர்களுக்கு அல்ல. வைரஸ்கள் செல்லுக்குள் ஊடுருவி மூலக்கூறு அமைப்பையே தன் வசமாக்கி புதிய வைரஸ்கள் உருவாகக் காரணமாகியுள்ளன. இதன் ஜெனோம்களை ஆராய்ந்ததில் ஐரோப்பிய கரோனா வகைமாதிரி பிரதானமாக அமெரிக்கர்களுக்குப் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
ஆசிய நாடான சீனாவிலிருந்து அல்ல என்பதும் தெளிவாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் சீன மற்றும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் புதிய வைரஸின் முதல் மரபணுவை வெளியிட்டனர்.
அது முதல் உலகம் முழுதும் சுமார் 3,000 மரபணுக்களை ஆய்வாளர்கள் சீக்வன்ஸ் செய்துள்ளனர்.
சில ஒன்றைப்போலவே உள்ளன. மற்ற மரபணுக்களின் உரு, இயல்பு மாறியிருந்தன. புதனன்று நியூயார்க்கில் 779 பேருக்கு கரோனா தொற்றுக்கு பலியாக பலி எண்ணிக்கை நியூயார்க்கில் 6,268 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
42 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago