உலக நாடுகளுக்கு முன் உதாரணமாகும் தென்கொரியா: தொடர்ந்து குறையும் நோய்த்தொற்று

By செய்திப்பிரிவு

தென்கொரியாவில் புதிதாக 37 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்து வருகிறது. புதன்கிழமையன்று இதுவரை இல்லாத அளவு குறைந்தபட்ச எண்ணிக்கையாக 37 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தென்கொரியாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தென்கொரிய அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது அங்கு கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.

தனி பரிசோதனை மையங்களை உடனடியாக அமைத்து, விரைவாக கரோனா தொற்றுப் பரிசோதனைகளை அந்நாடு நடத்தியது. இதனைத் தொடர்ந்து இதற்கான பலனை தென்கொரியா அடைந்துள்ளது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளது தென்கொரியா.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 88,338 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஸ்பெயினில் 14,555 பேரும், இத்தாலியில் 17, 669 பேரும் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்.அமெரிக்காவில் 14,965 பேர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

மேலும்