எங்கள் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீப் கூறும்போது, “ நாங்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்க வேண்டும். நாங்கள் அமெரிக்காவிடமிருந்து நிதியை எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகள் கரோனா வைரஸால் ஈரான் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. ஈரானில் கரோனா வைரஸுக்கு இதுவரை 62,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதனிடையே அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார். இந்நிலையில் எங்கள் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீப் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,096 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago