கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், நேற்று திடீரென லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவரை ஐசியுவுக்கு மாற்றியதாகவும், சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் முன்னேற்றம் எற்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் தரப்பில், “போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் சிரமமில்லாமல் மூச்சு விடுவதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை” என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்