கரோனா வைரஸ் பாதிப்பு: சுவீடன் பிரதமருடன் பிரதமர் மோடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பாதிப்பு குறித்து சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃபெனுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை விடவும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சுவீடனும் ஒன்று. இந்த நாட்டில் இன்று வரையில் 7693 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 591 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃபெனுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க இணைந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்