கரோனா வைரஸ் பாதிப்பு: இந்திய - அமெரிக்க பத்திரிகையாளர் மரணம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்திய - அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 47 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உயிரிழப்புகள் 10,000 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 3,67,629 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அங்கு இந்திய - அமெரிக்க வாழ் பத்திரிகையாளரான பிரம் காஞ்சிபோட்லா கரோனா வைரஸுக்கு மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த பிரம் காஞ்சிபோட்லா (66) நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம் காஞ்சிபோட்லா மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “ பிரம் காஞ்சிபோட்லா இறுதிச் சடங்கு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் இறுதிச் சடங்கில் 10 பேர் வரைதான் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவில் சுமார் 28 ஆண்டுகளாக பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த பிரம் காஞ்சிபோட்லா ’United News of India’ என்ற செய்தி நிறுவனத்தில் இறுதியாகப் பணியில் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்