கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உடல்நிலை மோசம்:ஐசியு-வுக்கு மாற்றம்

By பிடிஐ

கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் உடல்நிலை மோசமானதால், சாதாரண வார்டிலிருந்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜான்ஸனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவரை ஐசியுவுக்கு மாற்றியதகவும், சுயநினைவுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்ய்பட்டாலும், தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் நேற்று திடீரென லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது மிகவும் சோர்வாகவும், பரிதாபமான நிலையிலும் தனது வீட்டுஅறையிலிருந்து வெளியேறி மருத்துவமனைக்குச்சென்றார். இந்நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்ததால் உடனடியாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றினர்

இதனால் தனது பொறுப்புகள் அனைத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் கவனித்துக்கொள்வார் என பிரதமர் ஜான்ஸன் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ பிரதமர் ஜான்ஸனின் உடல்நிலை மோசமானாதால் அவரை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவெடுத்து மாற்றினர். இதனால், அவரின் பொறுப்புகள் அனைத்தும் வெளியுறவத்துறை அமைச்சர் டோமினிக் ராப் கவனிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டது

வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் நிருபர்களிடம் கூறுகையில் “ ஜான்ஸனின் திட்டப்படி கரோனா வைரஸை வெற்றிகரமாக ஒழிக்கும் பணியில் பிரிட்டன் தொடர்ந்து ஈடுபடும். அரசின் வழக்கமான பணிகள் தொடர்ந்து நடக்கும். சிறந்த மருத்துவர்களைக் கொண்ட வல்லுநர்களின் கைகளில் பிரதமர் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கிறார், அவருக்கு சிறந்த மருத்துவசிகிச்ைச தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு தொடர்ந்து பிரதமர் ஜான்ஸன் வழிகாட்டலின்படிதான் செயல்படும். கரோனா வைரஸ் சவாலிலிருந்து நிச்சயம் இந்த நாடு மீளும்” எனத் தெரிவித்தார்

புனித தாமஸ் மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், “ பிரதமர் ஜான்ஸன் சுயநினைவுடன்தான் இருக்கிறார், அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், அதீதமான காய்ச்சலும் இருந்தது, இது மேலும் அவரின் உடல்நிலையை மோசமாக்கும் என்பதால், அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியது இருந்ததால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினோம்” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

மேலும்