கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதில் அமெரிக்கா, இத்தாலி,ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்று வரை உலகம் முழுவதும் 12.18 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 65,841 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டு 2.53 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
உலகிலேயே அதிக அளவாக இத்தாலியில் 15,362 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 11,744 பேரும், அமெரிக்காவில் 8,501 பேரும், பிரான்ஸில் 7,560 பேரும், பிரிட்டனில் 4,313 பேரும், ஈரானில் 3,452 பேரும், சீனாவில் 3,333 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, பிரேசில்,ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளிலும்பலர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 33 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதையடுத்து புதிய மருத்துவமனைகளை அமைக்கும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது.- பிடிஐ
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago