ஏராளமான உயிரிழப்பு இருக்கும்; அடுத்த இருவாரம் மோசமாக இருக்கும்: அதிபர் ட்ரம்ப் மக்களுக்கு எச்சரிக்கை

By பிடிஐ

அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்கள் மிகவும் மோசமாக இருக்கும், கரோனா வைரஸால் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும், இருப்பினும் நாம் வெற்றிகரமாகத் தடுப்போம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மக்களுக்கு அறிவிப்பு விடுத்தார்

கரோனா ைவரஸின் தாக்கம் அமெரக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும் அங்கு இதுவரை கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

மக்கள் அனைவரும் மிகவும் அதிகமாக சமூக விலக்கலைக் கடைபிடிக்கவேண்டும், அதீதமான சுகாதார நடவடிக்கைகளை கடைபடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளைமாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்க மக்களுக்கு அடுத்த இரு வாரங்கள் மிக, மிக மோசமானதாக இருக்கப் போகிறது. கரோனா வைரஸால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடலாம். இதுநாள் வரை அதுபோன்ற சூழலை நாடு பார்த்திராததாக இருக்கும்.

துரதிர்ஷ்டமாக அந்த சூழலை எதிர்கொண்டு வருகிறோம், பல உயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், வரும் வாரங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மாற்றுவோம். அடுத்த இரு மாதங்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மக்கள் உயிரிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உயிரிழப்புகள் எண்ணிக்கையை நாங்கள் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால் துரதிர்ஷ்டமாக அது போன்ற சூழலுக்குள் நாம் நுழைந்துவிட்டோம், மோசமான உயிரிழப்புகள் இருக்கப்போகிறது, அந்த சூழல் நல்லதாக அமையாது. இதுபோன்ற உயிரிழப்புகளை நான் இதற்கு முன் நான் பார்த்தது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன். முதலாம் உலகப்போர், 2-ம் உலகப்போர் ஆகியவற்றில் இதுபோன்ற உயிரிழப்புகள் இருந்திருக்கலாம். ஆனால், இது நாம் அனைவருக்குமான போர்க்காலமாக இருப்பது மோசமானதாகும்” எனத் தெரிவித்தார்

துணை அதிபர் பென்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், “ அமெரிக்காவில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதகளைச் செய்து வருகிறோம், அதிகரித்து வருகிறோம். ஆனால் அடுத்துவரும் வாரங்கள் மக்களுக்கு மோசமானதாக இருக்கப்போகிறது. அமெரிக்கா முழுவதும் மருத்துவப்பரிசோதனைகள் செய்யும் போதுதான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த சூழலைத் தவிர்க்க மக்கள் தீவிரமாக சமூக விலக்கலைக் கடைபிடிக்க வேண்டும், வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியது அவசியம். இப்போதுள்ள கணக்கெடுப்பின்படி 33 கோடி அமெரிக்க மக்களில் 90 சதவீதம் அமெரிக்கர்கள் வீ்ட்டுக்குள் இருக்கிறார்கள்.

அடுத்துவரும் நாட்களில் நியூயார்க் நகரம் மிகப்பெரிய உயிரிழப்புகளைசந்தக்கும் என கணித்துள்ளோம், அதன்பின் குறையத்தொடங்கும்” எனத் தெரிவித்தார்

வெள்ளைமாளிகையி்ன் கரோனா வைரஸ் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டெபோரா பிர்க்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், “ அமெரி்க்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்துக்கு மேல் அதிகரித்து வி்ட்டது. இந்த சூழலில் மக்கள் பலசரக்கு கடைக்குச் செல்வது, மருந்தகங்களுக்குச் செல்வதைத் தவிர்தது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியில் நின்று பேசுங்கள்

நியூயார்க், நியூஜெர்ஸியில் அடுத்த இரு வாரங்கள் மோசமான உயிரிழப்புகள் இருக்கும். நியூயார்க்கில் அடுத்த வாரத்தில் அதிகபட்சமாக 855 பேர் வரை உயிரிழக்கவாய்ப்புள்ளது. 60 ஆயிரம் பேர்வரை சிகிச்சையளிக்க படுக்கை வசதி இருக்கிறது.

நியூயார்க், நியூஜெர்ஸியில் 35 சதவீத மக்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, லூசியானாவில் 26 சதவீதம், மிச்சிகன், கனெக்ட்கட், இண்டியானா, ஜியோர்ஜியா, இல்லிநாய்ஸ் ஆகியவற்றில் 15 சதவீதம், கொலராடோ, வாஷிங்டன் டிசி, ரோட் ஐலாந்து, மசாசூசெட்ஸ் 13 சதவீதம் , டெட்ராய்ட், பென்சில்வேனியா ஆகியவற்றிலும் மோசமாக இருக்கிறது.” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்