ஈரானில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரான அலி லரிஜானிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானில் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃபின் செயலாளர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். ஈரானில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதிகளில் கரோனா வைரஸுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் பதிவாகி உள்ளது. ஈரானில் இதுவரை 50,468 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
» உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 10 லட்சம் மக்கள் பாதிப்பு
» கரோனா தொற்று: பிரான்ஸில் பலி எண்ணிக்கை 4,500 ஆக அதிகரிப்பு
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago