அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம், லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக்காக்க அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது. இதுவரை அந்த நாட்டில் 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலுக்கு அஞ்சி அமெரிக்காவில் உள்ள 33 கோடி அமெரிக்கர்களில் 30 கோடி அமெரிக்க மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளார்கள்.
இந்ந நிலையில் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்காவில் பரவிவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம்.
நாம் இப்போது கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும அரசு வழிகாட்டலின்படி விதிமுறைகளைக் கடைபிடித்து கரோனா தொற்றைக் குறைக்க வேண்டும். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம், இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்
நாம் சமூக விலக்கலைக் கடைபிடித்து, அதீதிமான சுத்தத்தை கடைபிடித்து, வீட்டுக்குள்ளே இருப்புதான் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முக்கியமான ஆயுதம், அந்த பெரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியும். நாம் அடுத்துவரும் வாரங்களில் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையில் இருங்கள்
மிகச்சிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோருடன் கலந்துபேசி அமெரிக்கா கரோனா வைரஸுக்கு எதிராகப் பணியாற்றி வருகிறது. கரோனா வைரஸிலிருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள தேவையான மருத்துவம், சிகிச்சை, தடுப்பு மருந்துகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறோம்
மருத்துவ ரீதியாக நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். உலகில் எந்த நாடும் செய்யாத அளவுக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறோம். கரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து அதை பரிசோதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்துள்ளது. மக்களை கரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற அமெரிக்கா எடுத்து வரும் முக்கியமான முயற்சிகளில் இது மைல்கல்.
இ்வ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago