கரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் இறந்தவர்களில் 95% பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஐரோப்பாவில் கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களில் 95 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள். கரோனா வைரஸ் வயதானவர்களுக்கு மட்டும்தான் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது தவறு. மேலும் 50 வயதுக்குட்டபட்ட 10% முதல் 15% பேருக்கு கரோனா வைரஸால் மிதமான பாதிப்பு ஏற்படுகிறது.
ஐரோப்பாவில் சமீபத்திய தகவலின்படி 30,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago