இஸ்ரேல் பிரதமருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று பரிசோதனை

By செய்திப்பிரிவு

இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்படவுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தியுள்ளது. 48 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்.

மேலும், உலக அரசியல் தலைவர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதன் முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. யாகோவ் லிட்ஸ்மன், பிரதமர் நெதன்யாகுவுடன் அரசியல் ரீதியாக நெருங்கிய தொடர்பு கொண்டவர். இதன் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு இரண்டாவது முறையாக கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

58 mins ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்