கரோனா வைரஸால் அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம்: நியூயார்க் ஆளுநர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவில் 93 ஆயிரம் பேரும், நியூயார்க்கில் 16 ஆயிரம் பேரும் இறக்கக்கூடும் என்று நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா வைரஸால் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ தனியார் நிறுவனம் ஒன்றின் தரவைக் குறிப்பிட்டு பிற மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆண்ட்ரூ குவாமோ கூறும்போது, "தனியார் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி கரோனா தொற்று நோய் முற்றிலுமாக நீங்குவதற்குள் அமெரிக்காவில் 93,000 பேர் வரை பலியாகலாம். நியூயார்க்கில் 16,000 பேர் இறக்கலாம். புதன்கிழமை மட்டும் நியூயார்க்கில் சுமார் 7,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்