தீயாகப் பரவும் கரோனா: அடுத்த சில நாட்களில் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிக்கும்; உயிரிழப்பு 50 ஆயிரமாக உயரும்

By ஐஏஎன்எஸ்

உலகில் மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸால், அடுத்த சில நாட்களில் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிக்கும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகளவில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக கோவிட்19 வைரஸ் இருந்து வருகிறது. சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, ஐரோப்பாவுக்குள் நுழைந்த கரோனா வைரஸ், அங்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் இறந்தவர்கள் எண்ணிக்கையில் ஐரோப்பியாவில்தான் அதிகமாகும்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது, ஜெர்மனில் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்தை நெருங்குகின்றனர். பிரான்ஸில் 50ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி இத்தாலியில் 13,155 பேர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார்கள், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது, 5 ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேஸஸ் ஜெனிவாவில் நேற்றுக் கூறுகையில், “ கரோனா வைரஸ் உலகில் பரவத்தொடங்கி 4-வது மாதத்தை எட்டியிருக்கிறோம். உலக அளவில் கோவிட்-19 காட்டுத்தீயாக பரவிவருவது எனக்கு பெரும் கவலையாகவும், அச்சமாகவும் இருக்கிறது. குறிப்பாக கடந்த 5 வாரங்களில் கோவிட்19 வைரஸ் பரவும் வேகம் மோசமாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பும் இரு மடங்கு அதிகரித்துள்ளது

உலகளவில் கரோனா வைரஸுக்கு புதன்கிழமை நிலவரப்படி 47 ஆயிரத்து 241 பேர் உயிரிழந்துள்ளனர். 9லட்சத்து 35 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 200 நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.
சீனாவில் 81,554 பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டு அதில் 76 ஆயிரத்து238 பேர் மீண்டுள்ளனர், சீனாவுக்கு வெளியே 7 லட்சத்து 44 ஆயிரத்து 781 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 37 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மோசமாக அமெரி்க்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா, தென் அமெரி்க்கா நாடுகளில் சிலர் மட்டும கராோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வளர்ந்து வரும் நாடுகள் மக்களுக்கு சமூகநலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியமல் இந்த கரோனா வைரஸால் திணறுகிறார்கள். வரும் நாட்களில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆயிரத்தையும், பாதிக்கப்பட்டோர் 10 லட்சமாகவும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகிறோம்

இவ்வாறு டெட்ராஸ் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்