இங்கிலாந்து இளவர்சர் சாரலஸ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து மருத்துவப் பணியாளர்களுக்கு இளவரசர் சார்லஸ் நன்றி தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பரவி வருகிறது. இவ்வரைஸ் தொற்றுக்கு உலகின் பல முக்கிய அரசியல் தலைவர்கள், அரச குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இளவரசர் சார்லஸ் தற்போது கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்ததாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» கரோனா; தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மொபைல் போன் மூலம் கண்காணிப்பு: கேஜ்ரிவால்
» ‘‘மிக மோசமான குற்றம்’’ - டெல்லி மாநாடு குறித்து மத்திய அமைச்சர் விமர்சனம்
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த இளவரசர் சார்லஸ் வீடியோ ஒன்றை புதன்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இங்கிலாந்தின் மருத்துவப் பணியாளர்களுக்கு சார்லஸ் நன்றி தெரிவித்தார்.
வீடியோவில் சார்லஸ் கூறுகையில்,“ நான் முற்றிலும் குணமடைந்தாலும் தொடர்ந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்கப் போகிறேன்” என்றார்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago