பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பாகிஸ்தானில் கரோனா வைரஸால் சுமார் 2,039 பேர் பாதிக்கப்படுள்ளனர். சுமார் 20 பேருக்கு மேல் கரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் அதிகப்பட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 708 பேரும், சிந்து மாகாணத்தில் 676 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அங்கு ஏப்ரல் 4 ஆம் தேதிவரை விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 1,88,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
53 mins ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago