இந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் கீதா ராம்ஜி தென் ஆப்பிரிக்காவில் கரோனாவுக்கு பலி

By செய்திப்பிரிவு

இந்திய வம்சாவளி வைராலஜி ஆய்வு நிபுணர் கீதா ராம்ஜி தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸுக்குப் பலியானார், தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

கீதாராம்ஜி ஒருவாரத்துக்கு முன்னதாக லண்டனிலிருந்து திரும்பியுள்ளார், ஆனால் வெளியில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதற்காக குறிகுணங்கள் எதுவும் தென்படவில்லை.

கீதா ராம்ஜி ஒரு வாக்சைன் ஸ்பெஷலிஸ்ட் என்பதோடு ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பவர். இவரது மறைவால் வைரஸ் ஆய்விலும் ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆய்விலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்ததோடு, இவரது மறைவில் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க இந்திய வம்சாவளி பார்மசிஸ்ட் பிரவின் ராம்ஜியை இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ல் கீதாராம்ஜிக்கு லிஸ்பனில் தனித்துவமான பெண் விஞ்ஞானி விருது அளிக்கப்பட்டது. இவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

ஹெச்.ஐ.வி தடுப்பு ஆய்வுக்காக 2012-ல் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. அவர் 170க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

பல அறிவியல் இதழ்களுக்கு இவர் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்